Welcome to AutoNarrative !

நடைமண்டலம்

200.00

Category:
Compare

Description

பாரதியிடம் இருந்த ஆர்ப்பரிக்கும் ,உரத்த குரலில் இருந்து
ஒரு கனிந்த சொல்லமைதி மிக்க இடத்திற்கு நவீன கவிதையை எழுதிப் பார்த்தவர் தேவதேவன் எனத் தோன்றுகிறது.

அதே சமயம் காணும் இடத்தில் எல்லாம் உன் காட்சி தோன்றுதடா நந்தலாலா என்ற பார்வைக்கு நெருக்கமாக தன்னையும் தன் சுயத்தையும் இயற்கையின் ஓர் அங்கமாக பார்ப்பது தேவதேவனின் கவிதைகளின் பிரதான குணாம்சமாக இருக்கிறது. கோட்பாடுகளுக்கும் வடிவ மரபுகளுக்கும் வெளியே படைப்பு உந்தத்தால் மட்டும் தொடர்ந்து எழுதும் தேவதேவனின் படைப்பூக்கம் எந்த செயற்கை நுண்ணறிவாலும் ஈடு செய்ய இயலாதது. மானுடம் மீதான அக்கறை இவரது கவிதைகளின் ஆதார ஒளியாய் இருக்கிறது.நடைமண்டலம் என்ற இந்த தொகுப்பு எங்கும் அதற்கான சாட்சியங்களை காணலாம். தமிழ் கவிதையின் மாபெரும் பரிணாமத்தில் தேவதேவனின் பங்கு பிரத்தியேகமானது.
-நேசமித்ரன்

Quick Navigation
×
×

Cart