Autonarrative Publishing

காங்கோ-ஒரு செய்தியாளனின் சாகசப் பயணம்

ஒரு புத்தக அறிமுகம்

காங்கோ என்ற சொல் Congo Democratic Rebublic (DRC) ‘காங்கோ ஜனநாயக குடியரசு’ என்பதைக் குறிக்கிறது. அபரிமிதமான இயற்கை வளங்கள், அனுகூலமான ஹைட்ரோ மின் ஆற்றலுக்கான வாய்ப்புகள் உள்ளன. கனிமம் மற்றும் சுரங்க வளங்கள், உயிரியல் வளங்கள், இவையெல்லாம் கொட்டிக் கிடந்தாலும் இந்த தேசம் பிரச்சனைகளும், சுரண்டலும், சவால்களும் தாக்குபிடிக்க முடியாத நிர்வாக கோளாறுகளையும் கொண்டுள்ளது. ஆட்சியாளர்கள் பிரச்சனைகள் கைமீறி போய்விட்டதான விரக்தியில் இருக்கின்றனர். தேசத்தின் பல இடங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு அறவே இல்லை.

உலகின் பொருளாதாரம் காங்கோவின் கனிமவளத்தை நம்பி இருக்கிறது. கோபால்ட் (Cobalt), தாமிரம் (Copper), வெள்ளி, தங்கம், வைரங்கள் (Gold, Diamonds and gem/industrial diamonds), உலகின் மின்கடத்தல் மற்றும் மின்சார பொருட்களுக்கு தேவைப்படும் கனிமங்கள் (battery-metals / transition-minerals), இந்த வளங்களின் காரணமாக பிற தேசங்களின் நிறுவனங்கள் காங்கோவிற்கு வந்துகொண்டே இருக்கின்றன. பணம் வெள்ளம் போல பாய்கிறது.

1996-ம் ஆண்டு அருகாமை நாடான ருவாண்டா-வுடன் போர் துவங்குகிறது. அடுத்த ஆண்டு மீண்டும் அருகில் இருக்கும் சில நாடுகள் புதிய போரை துவங்குகின்றன. பிறகு 2003-இல் இருந்து இன்று வரை பல்வேறு ஆயுத குழுக்கள் தொடர்ந்து போரிட்டு வருங்கின்றன. 100-க்கும் மேற்பட்ட ஆயுத கிளர்ச்சிக் குழுக்கள் இனவாதம், பிரதேச, வளங்கள் போன்றவற்றை முன்னிட்டு கடுமையாக போரிடுகின்றன. இந்த மோதல்கள் காரணமாக, கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பிரதேசத்தைக் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது, பல வளங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு நாடு, போரினால் அகதிகளாக வெளியேறும் கோடிக்கணக்கான மண்ணின் மைந்தர்கள். என்ன ஒரு முரண்பாடு! கண்ணீர் உலராத கண்களுடன் தாய்மார்கள். ஒரு ராத்திரியில் கிராமத்தை இழந்த குடும்பங்கள். தனது பெயரைக் கூட நினைவில் வைத்திராத சிறுவர்கள்.

ஒரு நாட்டின் வளம், அதன் மக்களின் நலனாக மாறாவிடில், அந்த வளம் சாபமாக மாறும்.

இந்த பின்னனியில் விக்கிபீடியா உள்ளிட்ட இணையம், தொலைக்காட்சி செய்திகள், புரளிகளால் நிறைந்த சோஷியல் மீடியா பகிர்வுகளை கணக்கில் கொள்ளாமல், அஞ்சன் சுந்தரம் என்ற அஞ்சாத தமிழர் போரின் இருண்ட காலத்தின் உடே, இந்த தேசத்திற்குள் பயணித்து செய்தி சேகரிக்கிறார். இந்த அனுபவம் அணு அணுவாக ஒவ்வொரு வார்த்தையாக இந்த நூலில் சொல்லப்படுகிறது.

புனைவை மிஞ்சிய நிஜம், மொழி அலங்காரங்களை மீறும் குரூரத்தின் அழகு, அதிர்ச்சிக்காக அல்லாது மானுட அவலங்களை சொல்லும் போர்க் காட்சிகள் என நிறுத்தாமல் படிக்கத் தூண்டும் புத்தகம்.

ஆட்டோ நரேடிவ் பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்.

autonarrative.com

ஆசிரியர் அறிமுகம்

அஞ்சன் சுந்தரம் இந்திய வம்சாவளியைக் சேர்ந்த சர்வதேச செய்தியாளர், எழுத்தாளர், மனித உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரம் குறித்த ஆழமான பதிவுகளுக்காக உலகளவில் அறியப்படுகிறார். உலகின் மிக ஆபத்தான பகுதிகளில் இருந்து உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலான செய்தியாளராக அவர் அடையாளம் பெற்றுள்ளார்.

கல்வி & ஆரம்பப் பயணம்

இந்தியாவில் பிறந்து, பின்னர் யேல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிலையங்களில் கணிதமும் புள்ளியியலும் படித்தவர்.

சிறந்த தொழில் வாழ்க்கையைத் விட்டுவிட்டு, ஆப்பிரிக்காவின் மையத்திற்குச் சென்று செய்தியாளராக மாறியவர்.

“உலகம் கேட்காத கதைகளை சொல்ல வேண்டும்”—என்பது அவரது வாழ்க்கையின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

பத்திரிகையாளர் பயணம்

அஞ்சன் சுந்தரம் எழுதிய கட்டுரைகள் உலகின் முக்கிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன:
The New York Times, The Washington Post, The Guardian, Associated Press ஆகியவை.

அவர் செய்தியாளராக பணிபுரிந்த இடங்கள்:

காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) – சண்டைகள், அரசியல் நெருக்கடி, மனித உரிமை மீறல்கள்

ருவாண்டா – ஊடகத் தடை, அதிகாரத்தின் கண்காணிப்பு, அரசியல் கட்டுப்பாடு

மற்றும் பல ஆபத்தான பிராந்தியங்கள்

எழுத்தாக்கங்கள்

சுந்தரத்தின் எழுத்து நேரடித்தன்மை, ஆழமான மனித உணர்வு, அரசியல் சித்திரம், மற்றும் சக்திவாய்ந்த உண்மைப் பதிவு ஆகியவற்றை இணைக்கிறது.
அவர் எழுதும் ஒவ்வொரு வரியும் ஒரு நாடின் மறைக்கப்பட்ட வேதனைகளையும், அதை வாழும் மக்களின் குரலையும் முன்னிறுத்துகிறது.

பிரபலமான படைப்புகள்

Stringer: A Reporter’s Journey in the Congo
— ஒரு செய்தியாளரின் ஆபத்தான ஆப்பிரிக்கப் பயணத்தின் சாட்சியம்

Bad News: Last Journalists in a Dictatorship
— ருவாண்டாவில் ஊடகச் சுதந்திரமின்மையின் இனிமையும் இருளும்

சிறப்பம்சங்கள் & அங்கீகாரங்கள்

கூர்மையான அரசியல் பார்வை. சுவடுகள் நிறைந்த கதையாக்கம். ஆபத்தான சூழல்களில் உண்மையைத் தேடும் தைரியம். சர்வதேச அளவில் பல விருதுகள், இலக்கியத்திலும் பத்திரிகையாளரிலும் பாராட்டுகள்

ஏன் அவர் முக்கியம்?

புறக்கணிக்கப்பட்ட மக்களின் கதைகளை ஆபத்தான நிலப்பரப்புகளில் நேரடியாகச் சென்று பதிவு செய்து வருகிறார். அறிக்கைகளிலும் புத்தகங்களிலும் அவர் எழுப்பும் கேள்விகள்—
உண்மையின் விலை என்ன?
அரசியல் சுதந்திரமின்மை எப்படி மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது?
உலக ஊடகங்கள் தவறவிடும் கதைகள் என்ன?
இவை, வாசகர்கள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன.

அஞ்சன் சுந்தரம்— உண்மையின் குரலை உலகுக்கு கொண்டு வரும் நவீன காலத்தின் மிகத் துணிச்சலான பத்திரிகை எழுத்தாளர்களில் ஒருவர்.

வெளி இணைப்பு: https://anjansundaram.com/

Translation

கருந்தேள் ராஜேஷ் ஒரு மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல;
திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசை ஆர்வலர், சினிமா ஆய்வாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல பரிமாணங்களில் தன்னை நிலைநிறுத்திய பன்முக படைப்பாளர்.

முன்னர் ஐ.டி. (IT) துறையில், பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், சினிமா, திரைக்கதை மற்றும் திரை விமர்சகராக விரும்பி இவற்றில் பணியாற்றத் தொடங்கினார். திரைக்கதை எழுத்தாளரும், ஸ்கிரிப்ட் ஆலோசகராவும் உள்ளார்.

“Game Freak” என்று தன்னை குறிப்பிடுகிறார், இது அவருடைய கலை மற்றும் விளையாட்டு ஆர்வத்தையும், பரபரப்பான சாகசப் படைப்புக்களின் மீதான காதலையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

“Author / Film Critic / Script Writer / Script Consultant / Game Freak” போன்ற பல அடையாளங்களில் பல்துறை செயலில் இருப்பவர்.

Register

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Lost Password

Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.

Close
Close
Shopping cart