- (0 reviews)
சாரு நிவேதிதாவால்...
₹50.00ஒட்டுமொத்த இந்திய சமூக மனநிலைக்கு எதிராக வாழ்ந்தும் எழுதியும் வரும்
சாரு நிவேதிதாவிற்கு இந்த சமூகத்தில் இருந்து நிராகரிப்பையும் தடையையையும்
தவிர வேறென்ன கிடைக்கும்? இந்நூல் முழுவதும் பொது சமூகமும், அறிவுலகும் எப்படி
ஒரு கலைஞனை தீண்டாமைக்குள்ளாக்குகிறது என்பதை விளக்குகிறது. - (0 reviews)
கம்பன் சுயசரிதம்...
Original price was: ₹180.00.₹150.00Current price is: ₹150.00.கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான். ஆனால் அந்தக் கதையை அங்கங்கே, செதுக்கிச் சீராக்கி, தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, கம்பன் கொண்டு செல்கின்ற திறம், கம்பன் கவி நலம், கம்பன் பாத்திரப் படைப்புகள் இவையெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அவன் பாடிச் சென்றுள்ள பன்னீராயிரம் பாடல்களையும் நாம் படித்து அனுபவிக்க அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம் என்றே பி.ஜி. ஆச்சார்யா, முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டிகேசி போன்றவர்கள், அந்தக் கம்பராமாயணத்திலிருந்து தெள்ளி எடுத்து, அவற்றைக் கம்ப சித்திரமாகவும், கம்பராமாயண சாரமாகவும், கம்பர் தரும் காட்சியாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள்.
- (0 reviews)
நீண்ட ஆயுளும்...
Original price was: ₹100.00.₹40.00Current price is: ₹40.00.பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடக உலகில் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவருக்குத் “தமிழ் நாடகத் தந்தை” என்ற பெருமை வழங்கப்பட்டிருப்பது அவருடைய பெரும் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் நாடகங்களை முதன்முதலாக உரைநடையில் எழுதியவர் அவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் ஆகிய பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தார். அவரது படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் தமிழ் இலக்கியத்தையும், மேடை நாடகக் கலையையும் மிகவும் செழுமையாக்கியவை. இந்த நூலில், பம்மல் சம்பந்த முதலியார் தனது அனுபவங்களின் அடிப்படையில் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். நம் காலத்தில் புதிய உணவு பழக்கங்களும், வேறுபட்ட பணிச் சூழல்களும் மேலோங்கியுள்ள நிலையில், 84வது வயதில் அவர் வழங்கிய ஆரோக்கியக் கருத்துகள் இன்னும் பிரசక్తமானவை. அவரது வார்த்தைகள், நம் வாழ்க்கையை சீர்செய்து ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற உதவும் வழிகாட்டியாக இருக்கும்.
- (0 reviews)
சொன்னால் நம்பமாட்டீர்கள்,...
Original price was: ₹350.00.₹300.00Current price is: ₹300.00.பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார்.
தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பிரசுரம் மூலம் நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில் – லாபம் கருதாமல் வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி
– சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி
- (0 reviews)
நவகாளி யாத்திரை...
₹75.00வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் – அருமையான சந்தர்ப்பம் – ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும். சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ‘சாவி’யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்தன.
“நவகாளிக்குப் போகிறீர்களா?” என்று கேட்டதும் ஒரு கண்மும் யோசியாது, “போகிறேன்” என்று உடனே ஒப்புக் கொண்டார்.
காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.
அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார்.
“கிராமம் கிராமமாகக் கால்நடையாக நடந்து செல்வேன். அன்பு மதத்தையும், அஹிம்சா தர்மத்தையும் பரப்புவேன்!” என்று சொன்னார்.
பலர் சந்தேகப்பட்டார்கள். வேண்டாம் என்று தடுத்தார்கள். ‘காரியம் கைகூடாது; வீண் அபாயத்துக்கு உட்படுகிறீர்கள்’ என்று சொன்னார்கள். வழக்கம் போல மகாத்மா இந்தத் துக்கிரி வார்த்தைகளுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை. தமது அந்தராத்மாவின் குரலுக்கே செவி சாய்த்தார். நவகாளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ்வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப்போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்” என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார்.
- (0 reviews)
மார்க்சீய அழகியல்...
Original price was: ₹75.00.₹50.00Current price is: ₹50.00.மார்க்சீய அழகியல் கொள்கை, எல்லாவிதக் கலைப் படைப்புக்களையும், அனைத்துக் காலக் கலை வரலாற்றையும் விளக்குவதற்கு, மார்க்சீய அறிதல் தோற்றக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
‘அறிதல் தோற்றம்’ என்னும் கொள்கை, கருத்து முதல்வாத அறிதல் தோற்றக் கொள்கையை எதிர்த்த போராட்டத்தில் உருவானது. இதனை மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மார்க்சீயத் தத்துவத்தின் முதலாசிரியர்கள் உருவாக்கினார்கள்.
கருத்துப் போராட்டங்களில் உருவான மார்க்சீய அறிதல் தோற்றத்தின் முக்கியமான அடிப்படைகள் பின்வருமாறு: இவை பிரதிபலிப்புக் கொள்கையென மார்க்சீயவாதிகளால் அழைக்கப்படும்.
- பொருள்கள் நமது உணர்விற்கு வெளியே சுதந்திரமாக நிலைபேறு கொண்டுள்ளன.
- ஒரு பொருளின் சாரம் என்பதே (thing in itself) பொருளின் தன்மை அல்லது பொருளின் நிகழ்வுத் தொடர்தான்.
பொருளைப் பற்றி எந்த அளவு தெரிந்து கொண்டிருக்கிறோம், எந்த அளவு தெரிந்துகொள்ளவில்லை என்ற அளவில் தான் வேறுபாடு உள்ளது. முற்காலத்தில் அணு என்ற பொருளைப் பற்றித் தெரிந்ததைப் (லுக்ரீஷியஸ் கானடர்) பண்டையத் தத்துவ ஞானிகள் வெளிப்படுத்தினார்கள். பிற்காலத்தில் டால்டன் அவர் காலம் வரை அணுவைப் பற்றித் தெரிந்ததைத் தொகுத்துக் கூறினார். தற்காலத்தில் அதே பொருளைப் பற்றி உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அணு பற்றிய கருத்தை மாற்றியுள்ளார்கள். அறிந்த அளவில்தான் மூன்று கட்டங்களிலும் வேறுபாடுள்ளதே தவிர அணு, இயக்கவியல் முரண்பாடுகளோடு இருப்புக் கொண்டுள்ளது.
- எந்த அறிவியல் துறையிலும் நாம் சிந்திப்பது போலவே, அறிவுத் தோற்றவியல் துறையிலும் நாம் இயக்கவியல் முறையில் சிந்திக்கவேண்டும். மாற்ற முடியாத சட்டுத் தந்த தோசையைப் போல் முடிவு பெற்ற ஒன்றாக அறிவைக் கருதலாகாது.