• Limited
    புதுமைப்பித்தன் சிறுகதைகள், தொகுதி-3, Puthumaipiththan Sirukathaigal, Vol-3
    (0 reviews)

    புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...

    300.00

    இன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.

    தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை.

    • சுந்தர ராமசாமி

    புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளும் மூன்று தொகுதிகளாக அச்சிடப்பட்டுள்ளன. இது தொகுதி மூன்று, 73-97 வரையிலான சிறுகதைகளை உள்ளடக்கியது.

  • Limited
    Out of stock
    கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், Karnaataka Murasum Naveena Tamil Ilakkiyaththin Meethaana Oar Amaippiyal Aaivum
    (0 reviews)

    கர்நாடக முரசும்...

    150.00

    நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று. ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன். ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே தமிழ்ச் சமூக வெளியில் ஏராளமான குப்பை மலிந்து கிடக்கிறது. இங்கே சினிமாவுக்கு எழுதுபவரும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குக் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களும்தான் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து குப்பையைப் பொறுக்கி அதை எப்படி கலையாக மாற்றுவது? அந்த மாயாஜாலத்தைத்தான் என்னுடைய நான்–லீனியர் கதைகள் செய்தன.