• Hot
    வேணுவனம் - Venuvanam by Devadevan (Tamil)
    (0 reviews)

    வேணுவனம் –...

    200.00

    தான் என்றும் ஒசத்தி என்றும் சறுக்கி விழுந்து விட்ட” மானுடரின் மத அமைப்புடன்
    தன்னைப் பொருத்தவும் அவரது மனம் இடம்கொடுக்கவில்லை; இன்னொரு பக்கம் துல்லிய
    எடைத்தராசாக மாறி இப்பிரபஞ்சத்தை அளவிடும் மார்க்ஸியம் போன்ற பொருளியல்,
    இவ்வுலக தத்துவத்தையும் அவரால் ஏற்க முடியவில்லை. அதற்காகவே அவர் கற்பனாவாத
    மரபுக்குப் போகிறார் என நினைக்கிறேன். அவரது கவிதைகளின் பிரதான உருவகங்களான
    பறவை, வானம் ஆகியவற்றை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில கற்பனாவாத
    கவிதைகளில் (ஷெல்லி, கீட்ஸ்) அடையாளம் காணலாம். குறிப்பாக ஷெல்லியின்
    கவிதைகளுக்கும் தேவதேவனுக்கும் விரல் தொடும் தொலைவு உள்ளது. அதே போலத்தான்
    எமர்சனின் கட்டுரைகள். தேவதேவன் இந்த மேற்கு-கிழக்கு இணைப்பின் வழியே பக்திக்
    கவிதை மரபின் மதசார்பில் இருந்து, கூட்டில் இருந்து பறந்து தனதான ஆகாயத்தைத்
    தொடுகிறார். இதைப் பற்றி கவிதை விமர்சனத்தில் நாம் போதுமானபடிக்கு பேசவில்லை
    என நினைக்கிறேன்.
    -ஆர். அபிலாஷ்

  • (0 reviews)

    விண்மாடம் –...

    200.00

    கவிதையின் மூலம் வாசகனை ஆன்மிக எழுச்சிக்கு முன் நகர்த்தும் பணியை அரூபமாய் செய்கிறார்

    தேடல் உள்ள வாசகன் தேவதேவன் வரிகளின் மூலம் மிக சுலபமாக அப் பேருண்மையை பேரமைதியை கண்டடைவான். என்பதே நான் கண்ட வாசிப்பின் தரிசனம்.
    -அமிர்தம் சூர்யா

  • HotLimited
    காண்பதும் காணாததும் - KANBADHUM KAANAATHATHUM BY DEVADEVAN
    (0 reviews)

    காண்பதும் காணாததும்...

    200.00

    புல் மரம் வீடு என பராக்கு பார்க்கும் மனிதர் அல்ல.  இயற்கையின் விசித்திரங்களுக்குள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் சரிவை கவிதை ஆக்குவது அவரது வழமையாகும். தேவதேவன் ஒரு தமிழ்க் கவிஞர் என்ற வகையில் , தன் முதுகில் பண்பாட்டின் பாரத்தைச் சுமந்தபடி , கவிதை அனுபவம் எனும் மலையின் சிகரம் நோக்கி களைப்படையாமல் ஏறிக் கொண்டிருக்கிறார். நாம் பூமியில் நின்றபடி அவர் ஏறிய உயரங்களை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • Hot
    மெது விஷமும் பற்ற இயலா புதுமனிதன் - Methu Vishamum Patra Iyala Puthumanithan by Devadevan (Tamil)
    (0 reviews)

    மெது விஷமும்...

    200.00

    “புதியனவற்றைப் புதிய மொழியில் பேச வேண்டியது கவிஞனுக்கு அவசியம்.”
    -மாயாகோவ்ஸ்கி

    இயற்கையோடு இயைந்த நிலையில் தன்னை இயற்கையாக அவதானித்து, இயற்கைப்
    பெருவெளியில் ஆனந்தம் தேடுகிற மனதுடன் தேவதேவன் தத்தளிக்கின்றார். அவருடைய
    மொழியானது கவிதையைத் தவமாகக் கருதி, வெளியில் தன்னிருப்பைக் கண்டறிய முயலுகின்றது.
    -ந.முருகேசபாண்டியன்

  • Limited
    நடைமண்டலம் - Nadaimandalam (Poems) by Devadevan
    (0 reviews)

    நடைமண்டலம் –...

    200.00

    பாரதியிடம் இருந்த ஆர்ப்பரிக்கும் ,உரத்த குரலில் இருந்து ஒரு கனிந்த சொல்லமைதி மிக்க இடத்திற்கு நவீன கவிதையை எழுதிப் பார்த்தவர் தேவதேவன் எனத் தோன்றுகிறது.  அதே சமயம் காணும் இடத்தில் எல்லாம் உன் காட்சி தோன்றுதடா நந்தலாலா என்ற பார்வைக்கு நெருக்கமாக தன்னையும் தன் சுயத்தையும் இயற்கையின் ஓர் அங்கமாக பார்ப்பது தேவதேவனின் கவிதைகளின் பிரதான குணாம்சமாக இருக்கிறது. கோட்பாடுகளுக்கும் வடிவ மரபுகளுக்கும் வெளியே படைப்பு உந்தத்தால் மட்டும் தொடர்ந்து எழுதும் தேவதேவனின் படைப்பூக்கம் எந்த செயற்கை நுண்ணறிவாலும் ஈடு செய்ய இயலாதது. மானுடம் மீதான அக்கறை இவரது கவிதைகளின் ஆதார ஒளியாய் இருக்கிறது.நடைமண்டலம் என்ற இந்த தொகுப்பு எங்கும் அதற்கான சாட்சியங்களை காணலாம். தமிழ் கவிதையின் மாபெரும் பரிணாமத்தில் தேவதேவனின் பங்கு பிரத்தியேகமானது.

  • 17% Off
    கம்பன் சுயசரிதம்-Kamban-Suyasaritham
    (0 reviews)

    கம்பன் சுயசரிதம்...

    Original price was: ₹180.00.Current price is: ₹150.00.

    கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான். ஆனால் அந்தக் கதையை அங்கங்கே, செதுக்கிச் சீராக்கி, தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, கம்பன் கொண்டு செல்கின்ற திறம், கம்பன் கவி நலம், கம்பன் பாத்திரப் படைப்புகள் இவையெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அவன் பாடிச் சென்றுள்ள பன்னீராயிரம் பாடல்களையும் நாம் படித்து அனுபவிக்க அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம் என்றே பி.ஜி. ஆச்சார்யா, முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டிகேசி போன்றவர்கள், அந்தக் கம்பராமாயணத்திலிருந்து தெள்ளி எடுத்து, அவற்றைக் கம்ப சித்திரமாகவும், கம்பராமாயண சாரமாகவும், கம்பர் தரும் காட்சியாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

  • 25% OffLimited
    புலியூர்க் கேசிகன்
    Kalamegapulavar Thanipadalgal – காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்
    (0 reviews)

    காளமேகப் புலவர்...

    Original price was: ₹200.00.Current price is: ₹150.00.

    காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சிலேடை பாடல்களைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.

    ~~~~~~~

    திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

     

     

  • 11% OffLimited
    Aganaanooru
    (0 reviews)

    அகநானூறு –...

    Original price was: ₹280.00.Current price is: ₹250.00.

    அகநானூறு பாடல்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பதிப்பிடப்பட்டுள்ளன. முதல் 120 பாடல்களைக் களிற்றியானை நிரை, 121 முதல் 300 வரையிலான 180 பாடல்களை மணிமிடை பவளம், 301 முதல் 400 வரையிலான 100 பாடல்களை நித்திலக் கோவை எனப் பெயரிட்டுள்ளனர்.

    ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து, தமக்குள் இன்பம் அனுபவித்து வாழ்வது அக வாழ்வாகும். இவ்வாறு, அவர்கள் தமது உள்ளத்திற்குள் நுகரும் உணர்வுகளை சித்தரிப்பவை அகநானூறு பாடல்கள். இந்தப் பாடல்கள் யானைக்களிறு போல் பெருமிதமுடன் நிறைந்தவை. யானைகளின் அணிவகுப்பை ஒத்திருக்கும் வகையில், ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாகே இவை அமைந்துள்ளன.

    இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளப் புலியூர்க் கேசிகன் அவர்களின் தெளிவுரை சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.