- (0 reviews)
தாய், Thai...
Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.1923ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார் தோ. முசி. ரகுநாதன். அவருடைய மூத்த சகோதரர் டி. எம். பாஸ்கர தொண்டமான், இந்திய அரசுப் பணியில் இருந்ததுடன் பிரபலமான எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ரகுநாதன், ஏ. ஸ்ரீநிவாச ராகவன் அவர்களின் மாணவராகவும் வழிகாட்டலையும் பெற்றார்.
1942ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைக்குக் செல்ல நேர்ந்தது. பின்னர், 1944ஆம் ஆண்டு தினமணி பத்திரிகையில் சில மாதங்கள் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு முல்லை இலக்கிய இதழில் சேர்ந்தார். 1945ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை நாவலான ‘புயல்’ வெளியானது.
1948ஆம் ஆண்டு வெளியான ‘இலக்கிய விமர்சனம்’ என்ற சிந்தனையாலோடு கூடிய விமர்சன நூல் அவரது முதல் முக்கியமான படைப்பாகும். அதன் பின்னர், 1951ஆம் ஆண்டு ‘பஞ்சும் பசியும்’ நாவலை எழுதினார். இந்த நாவல் செக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு, வெளியான சில வாரங்களில் 50,000 பிரதிகள் விற்கப்பட்டது.
தமில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் மற்றும் உறவினராகவும் இருந்தார் ரகுநாதன். 1948ஆம் ஆண்டு புதுமைப்பித்தன் மறைந்த பிறகு, அவரது பல நூல்களைத் திரட்டி வெளியிட்டார். 1951ஆம் ஆண்டு புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.
1999ஆம் ஆண்டு, ரகுநாதன், ‘புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமங்களும்’ என்ற நூலை வெளியிட்டார். இது 1951ஆம் ஆண்டு வெளியான புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும், பி. ஜி. சுந்தரராஜன் போன்றவர்களால் புதுமைப்பித்தன் மீது கூறப்பட்ட நகலைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எழுதிய ஆராய்ச்சிப் பாதுகாப்பாகவும் அமைந்தது.
தோ. முசி. ரகுநாதன், தமில் இலக்கியத்தின் ஒரு மாபெரும் பிரமுகராக மட்டுமல்ல, மறுமலர்ச்சிக்கான குரலாகவும் திகழ்ந்தார்.
- (0 reviews)
காளமேகப் புலவர்...
Original price was: ₹200.00.₹150.00Current price is: ₹150.00.காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சிலேடை பாடல்களைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
~~~~~~~
திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.
- (0 reviews)
புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...
Original price was: ₹200.00.₹100.00Current price is: ₹100.00.இன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.
தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை.
- சுந்தர ராமசாமி
- (0 reviews)
புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...
Original price was: ₹300.00.₹100.00Current price is: ₹100.00.‘புதுமைப்பித்தன்’ அவர்களை, தமிழ்நாடு நன்கறியும். அவருடைய எழுத்துக்களைப் பற்றிக் கருத்து வேற்றுமைகள் பல இருக்கலாம். ஆனால், அவைகளை அலட்சியப்படுத்தித் தள்ளிவிடவோ, பொழுதுபோக்கு என்று படித்துவிட்டுத் தூரப்போட்டுவிடவோ முடியாது. அவருடைய கதை எழுதும் பாணியே அலாதி. வட இந்தியாவின் பிரபல நாவலாசிரியர் பிரேம்சந்தைப் போலவே, சமூகத்தின் குறைகளைக் குத்திக் காட்டுவதில் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சக்தியும் கூர்மையும் பெற்று விளங்குகின்றன. இதில் அடங்கியுள்ள கதைகள் சமுதாயத்தின் பல பகுதிகளை பார்ப்பதற்கு நமக்குத் துணை செய்கின்றன.
- (0 reviews)
புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...
Original price was: ₹300.00.₹100.00Current price is: ₹100.00.இன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.
தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை.
- சுந்தர ராமசாமி
புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளும் மூன்று தொகுதிகளாக அச்சிடப்பட்டுள்ளன. இது தொகுதி மூன்று, 73-97 வரையிலான சிறுகதைகளை உள்ளடக்கியது.
- (0 reviews)
சொன்னால் நம்பமாட்டீர்கள்,...
Original price was: ₹350.00.₹300.00Current price is: ₹300.00.பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார்.
தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பிரசுரம் மூலம் நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில் – லாபம் கருதாமல் வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி
– சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி
- (0 reviews)
நவகாளி யாத்திரை...
₹75.00வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் – அருமையான சந்தர்ப்பம் – ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும். சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ‘சாவி’யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்தன.
“நவகாளிக்குப் போகிறீர்களா?” என்று கேட்டதும் ஒரு கண்மும் யோசியாது, “போகிறேன்” என்று உடனே ஒப்புக் கொண்டார்.
காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.
அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார்.
“கிராமம் கிராமமாகக் கால்நடையாக நடந்து செல்வேன். அன்பு மதத்தையும், அஹிம்சா தர்மத்தையும் பரப்புவேன்!” என்று சொன்னார்.
பலர் சந்தேகப்பட்டார்கள். வேண்டாம் என்று தடுத்தார்கள். ‘காரியம் கைகூடாது; வீண் அபாயத்துக்கு உட்படுகிறீர்கள்’ என்று சொன்னார்கள். வழக்கம் போல மகாத்மா இந்தத் துக்கிரி வார்த்தைகளுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை. தமது அந்தராத்மாவின் குரலுக்கே செவி சாய்த்தார். நவகாளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ்வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப்போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்” என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார்.
- (0 reviews)
மா பாரதம்...
Original price was: ₹250.00.₹175.00Current price is: ₹175.00.வடமொழியில் எழுதிய இராம காதையையும் மாபாரதத்தையும் தமிழ்ப்படுத்திய கம்பரும் வில்லிபுத்துராரும் அவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றைத் தம் கவிதையாற்றலால் சுவைபடத் தந்துள்ளனர். அதனால் இப் படைப்புகள் மூல நூலில் உள்ள கதையும், தமிழ்க் கவிதையும் கலந்து மாபெரும் காப்பியங்களாகத் திகழ்கின்றன. இவையே இன்று மேடைகளிலும் அரங்குகளிலும் செவி நுகர் கனிகள் என்று பேசப்படுகின்றன.
வில்லி பாரதமும் பட்டி தொட்டிகளில் பாரதப் பிரசங்கங்களாகப் பேசப்பட்டது. இன்று உரை நூல்கள் வந்துவிடுவதால் இருந்த இடத்தில் இருந்து இந்நூல்களின் அருமை பெருமைகளை உணர வாய்ப்பு ஏற்பட்டு விட்டதால் பாரதப் பிரசங்கங்கள் குறைந்து விட்டன.
வில்லி பாரதம் இக் கதையினை ‘மாபாரதம்’ என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.
- (0 reviews)
மார்க்சீய அழகியல்...
Original price was: ₹75.00.₹50.00Current price is: ₹50.00.மார்க்சீய அழகியல் கொள்கை, எல்லாவிதக் கலைப் படைப்புக்களையும், அனைத்துக் காலக் கலை வரலாற்றையும் விளக்குவதற்கு, மார்க்சீய அறிதல் தோற்றக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
‘அறிதல் தோற்றம்’ என்னும் கொள்கை, கருத்து முதல்வாத அறிதல் தோற்றக் கொள்கையை எதிர்த்த போராட்டத்தில் உருவானது. இதனை மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மார்க்சீயத் தத்துவத்தின் முதலாசிரியர்கள் உருவாக்கினார்கள்.
கருத்துப் போராட்டங்களில் உருவான மார்க்சீய அறிதல் தோற்றத்தின் முக்கியமான அடிப்படைகள் பின்வருமாறு: இவை பிரதிபலிப்புக் கொள்கையென மார்க்சீயவாதிகளால் அழைக்கப்படும்.
- பொருள்கள் நமது உணர்விற்கு வெளியே சுதந்திரமாக நிலைபேறு கொண்டுள்ளன.
- ஒரு பொருளின் சாரம் என்பதே (thing in itself) பொருளின் தன்மை அல்லது பொருளின் நிகழ்வுத் தொடர்தான்.
பொருளைப் பற்றி எந்த அளவு தெரிந்து கொண்டிருக்கிறோம், எந்த அளவு தெரிந்துகொள்ளவில்லை என்ற அளவில் தான் வேறுபாடு உள்ளது. முற்காலத்தில் அணு என்ற பொருளைப் பற்றித் தெரிந்ததைப் (லுக்ரீஷியஸ் கானடர்) பண்டையத் தத்துவ ஞானிகள் வெளிப்படுத்தினார்கள். பிற்காலத்தில் டால்டன் அவர் காலம் வரை அணுவைப் பற்றித் தெரிந்ததைத் தொகுத்துக் கூறினார். தற்காலத்தில் அதே பொருளைப் பற்றி உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அணு பற்றிய கருத்தை மாற்றியுள்ளார்கள். அறிந்த அளவில்தான் மூன்று கட்டங்களிலும் வேறுபாடுள்ளதே தவிர அணு, இயக்கவியல் முரண்பாடுகளோடு இருப்புக் கொண்டுள்ளது.
- எந்த அறிவியல் துறையிலும் நாம் சிந்திப்பது போலவே, அறிவுத் தோற்றவியல் துறையிலும் நாம் இயக்கவியல் முறையில் சிந்திக்கவேண்டும். மாற்ற முடியாத சட்டுத் தந்த தோசையைப் போல் முடிவு பெற்ற ஒன்றாக அறிவைக் கருதலாகாது.
- (0 reviews)
அகநானூறு –...
Original price was: ₹280.00.₹250.00Current price is: ₹250.00.அகநானூறு பாடல்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பதிப்பிடப்பட்டுள்ளன. முதல் 120 பாடல்களைக் களிற்றியானை நிரை, 121 முதல் 300 வரையிலான 180 பாடல்களை மணிமிடை பவளம், 301 முதல் 400 வரையிலான 100 பாடல்களை நித்திலக் கோவை எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து, தமக்குள் இன்பம் அனுபவித்து வாழ்வது அக வாழ்வாகும். இவ்வாறு, அவர்கள் தமது உள்ளத்திற்குள் நுகரும் உணர்வுகளை சித்தரிப்பவை அகநானூறு பாடல்கள். இந்தப் பாடல்கள் யானைக்களிறு போல் பெருமிதமுடன் நிறைந்தவை. யானைகளின் அணிவகுப்பை ஒத்திருக்கும் வகையில், ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாகே இவை அமைந்துள்ளன.
இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளப் புலியூர்க் கேசிகன் அவர்களின் தெளிவுரை சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.