Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

ISBN:9788198371676
உலகைப் படைத்துக் களைத்துப்போன கடவுள், பூமியின் இந்தப் பகுதியில் சிறிது நேரம் களைப்பாறும்போது, தன்னிடம் இருந்த செல்வங்கள் நிறைந்த மூட்டைகள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டார் என்றொரு காங்கோ நாட்டுப்புறக் கதை உண்டு.

வியக்க வைக்கும் அழகுடனும் கூர்மையான பார்வையுடனும் எழுதப்பட்டுள்ள காங்கோ - ஒரு செய்தியாளனின் சாகசப்பயணம், அஞ்ஜன் சுந்தரம் காங்கோவில் ஒன்றரை ஆண்டுகள் செலவிட்டு, அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்தி நிறுவனத்தில் மிகக் கீழ்மட்டத்தில் பணியாற்றிய அனுபவங்களை விவரிக்கிறது.
அவருடைய வாழ்க்கையின் தீவிரமான காலகட்டம், அவரை கின்ஷாசா (Kinshasa) நகரின் இருண்ட, மர்மமான பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறது.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய போர்களில் ஒன்றின் மையப்பகுதிக்கு அவருடைய பயணம் நீள்கிறது.இறுதியில், 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, வன்முறை நிறைந்த பல கட்சித் தேர்தல்களின் பின்னணியையும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது.இந்தப் பயணத்தின் இடையில், கின்ஷாசாவின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழும் தெருவோரக் குழந்தைகளுடன் அவர் சாகசப் பயணத்தில் ஈடுபடுகிறார். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வழியைத் தேடி ஏங்கும் பெண்களைச் சந்திக்கிறார். தனது அதிர்ஷ்டத்தைத் தேடி அலையும் ஓர் இந்தியத் தொழிலதிபருடனும் பயணம் செய்கிறார்.

குழப்பங்களால் சூழப்பட்ட காங்கோவின் வழியாக வாசகரை அழைத்துச் செல்லும் விறுவிறுப்பான பயணமாகவும், தன்னைத் தானே கண்டறியும் வியப்பூட்டும் அனுபவமாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

பத்திரிகைச் செய்தியியல் எழுத்தின் எல்லைகளைக் கடந்து, இலக்கியத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு, வாசகர்களை ஆழமாக ஈர்க்கும் நூலாகும்.

கருந்தேள் ராஜேஷின் மொழிபெயர்ப்பில் தமிழில் உருவாகியிருக்கும் புத்தகம், இது மொழிபெயர்ப்பு போலவே இல்லை என சாரு நிவேதிதாவால் பாராட்டப்பட்டுள்ளது.

Billing & Shipping

Additional information

Your order

Product Subtotal
காங்கோ -ஒரு செய்தியாளனின் சாகசப் பயணம், தமிழில் கருந்தேள் ராஜேஷ் - Congo - Pre-Order!  × 1 ₹480.00
Subtotal ₹480.00
Shipping
Total ₹520.00
  • Pay securely by Credit or Debit card or Internet Banking through Razorpay.

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.