• 20% OffLimited
    Neenda Ayulum Dega Arokiyamum
    (0 reviews)

    நீண்ட ஆயுளும்...

    Original price was: ₹100.00.Current price is: ₹80.00.

    பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடக உலகில் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவருக்குத் “தமிழ் நாடகத் தந்தை” என்ற பெருமை வழங்கப்பட்டிருப்பது அவருடைய பெரும் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் நாடகங்களை முதன்முதலாக உரைநடையில் எழுதியவர் அவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் ஆகிய பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தார். அவரது படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் தமிழ் இலக்கியத்தையும், மேடை நாடகக் கலையையும் மிகவும் செழுமையாக்கியவை. இந்த நூலில், பம்மல் சம்பந்த முதலியார் தனது அனுபவங்களின் அடிப்படையில் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். நம் காலத்தில் புதிய உணவு பழக்கங்களும், வேறுபட்ட பணிச் சூழல்களும் மேலோங்கியுள்ள நிலையில், 84வது வயதில் அவர் வழங்கிய ஆரோக்கியக் கருத்துகள் இன்னும் பிரசక్తமானவை. அவரது வார்த்தைகள், நம் வாழ்க்கையை சீர்செய்து ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற உதவும் வழிகாட்டியாக இருக்கும்.

  • HotLimited
    மந்தஹாசினி - Manthahaasini by Araathu (Tamil)
    (0 reviews)

    மந்தஹாசினி –...

    150.00

    மந்தஹாசினி ,ஸிரிஷா,ஹோனிகா – மூன்று நடனமாடும் பெண்கள் பற்றிய ஒரு சிறுநாவல். தரம்…

    ஆரம்பத்தில் ஹாசினி எனும் பெண்ணை பற்றிய கதை எழுதி முடித்த பின்னர் இதை எழுதியது நானா என்று அவரை அவரே கிள்ளி பார்த்திருப்பார். ஒரு கிளாசிக்கல் கதை சொல்லல் முறை. அதில் தன்னுடைய நக்கல் நய்யாண்டி என்று விளையாடி இருக்கிறார்.

    வழக்கமாக வரும் பாலியல் பெண்கள் கதைகள், நடிகைகளின் கதைகள் போல இரண்டாம் பெண்ணின் கதை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அந்த கதையை முடித்த விதம் அருமை.

    மூன்றாவது பெண்ணின் கதை விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கை உள்ள பெண்களின் கதை. மூன்று கதைகளும் பேசும் பெண்ணியம் தொடர்பான விசயங்கள் சிறப்பு.

  • Limited
    Thai
    (0 reviews)

    தாய், Thai...

    500.00

    1923ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார் தோ. முசி. ரகுநாதன். அவருடைய மூத்த சகோதரர் டி. எம். பாஸ்கர தொண்டமான், இந்திய அரசுப் பணியில் இருந்ததுடன் பிரபலமான எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ரகுநாதன், ஏ. ஸ்ரீநிவாச ராகவன் அவர்களின் மாணவராகவும் வழிகாட்டலையும் பெற்றார்.

    1942ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைக்குக் செல்ல நேர்ந்தது. பின்னர், 1944ஆம் ஆண்டு தினமணி பத்திரிகையில் சில மாதங்கள் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு முல்லை இலக்கிய இதழில் சேர்ந்தார். 1945ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை நாவலான ‘புயல்’ வெளியானது.

    1948ஆம் ஆண்டு வெளியான ‘இலக்கிய விமர்சனம்’ என்ற சிந்தனையாலோடு கூடிய விமர்சன நூல் அவரது முதல் முக்கியமான படைப்பாகும். அதன் பின்னர், 1951ஆம் ஆண்டு ‘பஞ்சும் பசியும்’ நாவலை எழுதினார். இந்த நாவல் செக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு, வெளியான சில வாரங்களில் 50,000 பிரதிகள் விற்கப்பட்டது.

    தமில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் மற்றும் உறவினராகவும் இருந்தார் ரகுநாதன். 1948ஆம் ஆண்டு புதுமைப்பித்தன் மறைந்த பிறகு, அவரது பல நூல்களைத் திரட்டி வெளியிட்டார். 1951ஆம் ஆண்டு புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.

    1999ஆம் ஆண்டு, ரகுநாதன், ‘புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமங்களும்’ என்ற நூலை வெளியிட்டார். இது 1951ஆம் ஆண்டு வெளியான புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும், பி. ஜி. சுந்தரராஜன் போன்றவர்களால் புதுமைப்பித்தன் மீது கூறப்பட்ட நகலைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எழுதிய ஆராய்ச்சிப் பாதுகாப்பாகவும் அமைந்தது.

    தோ. முசி. ரகுநாதன், தமில் இலக்கியத்தின் ஒரு மாபெரும் பிரமுகராக மட்டுமல்ல, மறுமலர்ச்சிக்கான குரலாகவும் திகழ்ந்தார்.

  • Limited
    PUTHUMAIPITHTHAN SIRUKATHAIGAL
    (0 reviews)

    புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...

    200.00

    இன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.

    தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை.

    • சுந்தர ராமசாமி
  • Limited
    புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுதி-2
    (0 reviews)

    புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...

    300.00

    ‘புதுமைப்பித்தன்’ அவர்களை, தமிழ்நாடு நன்கறியும். அவருடைய எழுத்துக்களைப் பற்றிக் கருத்து வேற்றுமைகள் பல இருக்கலாம். ஆனால், அவைகளை அலட்சியப்படுத்தித் தள்ளிவிடவோ, பொழுதுபோக்கு என்று படித்துவிட்டுத் தூரப்போட்டுவிடவோ முடியாது. அவருடைய கதை எழுதும் பாணியே அலாதி. வட இந்தியாவின் பிரபல நாவலாசிரியர் பிரேம்சந்தைப் போலவே, சமூகத்தின் குறைகளைக் குத்திக் காட்டுவதில் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சக்தியும் கூர்மையும் பெற்று விளங்குகின்றன. இதில் அடங்கியுள்ள கதைகள் சமுதாயத்தின் பல பகுதிகளை பார்ப்பதற்கு நமக்குத் துணை செய்கின்றன.

  • Limited
    புதுமைப்பித்தன் சிறுகதைகள், தொகுதி-3, Puthumaipiththan Sirukathaigal, Vol-3
    (0 reviews)

    புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...

    300.00

    இன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.

    தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை.

    • சுந்தர ராமசாமி

    புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளும் மூன்று தொகுதிகளாக அச்சிடப்பட்டுள்ளன. இது தொகுதி மூன்று, 73-97 வரையிலான சிறுகதைகளை உள்ளடக்கியது.

  • Limited
    Out of stock
    கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், Karnaataka Murasum Naveena Tamil Ilakkiyaththin Meethaana Oar Amaippiyal Aaivum
    (0 reviews)

    கர்நாடக முரசும்...

    150.00

    நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று. ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன். ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே தமிழ்ச் சமூக வெளியில் ஏராளமான குப்பை மலிந்து கிடக்கிறது. இங்கே சினிமாவுக்கு எழுதுபவரும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குக் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களும்தான் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து குப்பையைப் பொறுக்கி அதை எப்படி கலையாக மாற்றுவது? அந்த மாயாஜாலத்தைத்தான் என்னுடைய நான்–லீனியர் கதைகள் செய்தன.