• 20% Off
    பாலகுமாரன்
    பாலகுமாரன் நினைவுத் தடங்கள்
    (0 reviews)

    Gurupurnima Combo...

    Original price was: ₹650.00.Current price is: ₹520.00.

    1) சரஸ்வதி ஸ்வாமிநாதன் எழுதிய “சிவபாதசேகரனும் சிவசரணசேகரனும்’ பாலகுமாரனின் உடையார் மற்றும் கங்கைகொண்ட சோழன் ஆகிய புதினங்களுக்கு துணை நூல்.

    2) கிருஷ்ணா எழுதிய “பாலகுமாரன் நினைவுத்தடங்கள்”  பாலகுமாரனின் மரணம் சார்ந்த ஒரு நேரடி சாட்சியம்

    இந்த இரு புத்தகங்களும், குருபூர்ணிமா-வை முன்னிட்டு 20% தள்ளுபடி விலையில், தபால் செலவு இன்றி (இந்தியா முழுவதும்)

  • (0 reviews)

    Kuttyma –...

    500.00

    குட்டிமா – இது ஒரு நாவல் இல்ல டா… இது ஒரு லிட்டரரி புயல்!

    குட்டிமா இதுவரை வந்ததிலேயே போல்டான நாவல். ரா, ஹார்னி, ஹோலி – மூணும் ஒண்ணா ஒரே நாவலில் ! இது உன் அம்மாவோட, பாட்டியோட கட்டுப்பெட்டி பெமினிசம் இல்ல … இது புது ஜெனரேஷன் பீரங்கி!
    குட்டிமா ராஜகுமாரன தேடல… அவளே அவளுக்கான ராஜ்ஜியத்தை உருவாக்கறா!

    தயாராயிக்கோங்க… குட்டிமா வர்றா – ஒரு ஆட்டம் பாம் மாதிரி வெடிக்கப் போறா. காதல், செக்ஸ், பவர், சமூகத்தோட பொய்களை எல்லாம் கிழிச்சு தொங்க விடப் போறா. பேச்சே வராது டா உனக்கு!
    இது வழக்கமா வாசிக்கிற, ரீசைகிள் செய்த சைக்கலாஜிகல் குப்பை இல்ல… இது நரேட்டிவ் ரெவல்யூஷன்!

    மொத்தத்துல , குட்டிமா – லவ் பண்ணத் துணிஞ்சவ, லஸ்ட்டுக்கு துணிஞ்சவ, கட்டுப்பாடு இல்லாதவ . கமிட்மென்ட்டுக்கும் கண்ட்ரோலுக்கும் நடு விரல் காட்டுறவ!  கையில எடு டா… படிக்க மாட்ட… வாழ்ந்து பார்ப்ப! 💥🔥💦

  • (0 reviews)

    Maha Purushan,...

    1,000.00

    மகா புருஷன் (புருஷன்-2), அராத்து, நாவல் முன்பதிவு!

    Exclusive – Limited Edition – Hard Bound – Author-Signed Collector’s Copy

    The Most Daring Contemporary Novel in the World

    விலை. ரூ.1000/-

    கிறிஸ்துமஸ் வெளியீடாக கொண்டு வருகிறோம்.  இந்த முறை முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பிய பிறகுதான் மற்ற விற்பனைகளை துவங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.

    முன்பதிவில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் கெட்டி அட்டையில் பைண்டிங் செய்யபட்டு, (கொரியர் கட்டணங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள முகவரிக்கு மட்டும்).

    இந்த முன்பதிவு பிரத்தியேகமானது.

    • அராத்துவின் எழுத்துக்காகக் காத்திருக்கும் வாசகர்களுக்காக.
    • ஒரு புத்தகம் வெளியாவதற்கு முன்பே அதைத் தங்களுடையதாகக் கருதும் தீவிர வாசகர்களுக்காக.
    • வெளியீட்டு விழாக்களை இலக்கியத் திருவிழாவாக மாற்றும் நண்பர்களுக்காக.
    • கலெக்டர்ஸ் காப்பி, கையொப்பப் பிரதிகள், சிறப்பு பதிப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஒரு நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கும் அதிவாசகர்களுக்காக.

    மகா புருஷன் ஒரு நாவல் மட்டுமல்ல.
    அராத்துவின் இலக்கியப் பயணத்தில் மற்றொரு துணிச்சலான அத்தியாயம்.

    முந்தைய புத்தகங்களைப் போலவே, இந்தப் புத்தகத்தையும் வாசகர்களின் கைகளிலிருந்தே அதன் பயணம் தொடங்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இந்த முன்பதிவு.

    அராத்துவின் டை-ஹார்ட் வாசகர்களே,
    உங்கள் ஆர்வமும் ஆதரவும் தான் ஒரு புத்தகத்தை நிகழ்வாக மாற்றுகிறது. மகா புருஷன் நாவலையும் அதே உற்சாகத்துடன் வரவேற்று, இந்த முன்பதிவை ஒரு இலக்கியக் கொண்டாட்டமாக மாற்றுவோம்.

    இந்த முன்பதிவில் பங்கேற்கும் நீங்கள், வெறும் ஒரு புத்தகத்தை வாங்குவதற்காக மட்டும் பணம் செலுத்தவில்லை. விலை குறித்த கணக்குகளையும் தாண்டி, ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பின் உருவாக்கத்திலும் அதன் பயணத்திலும் பங்கெடுக்கிறீர்கள். ஒரு புத்தகத்தின் முதல் மூச்சில், முதல் அடியில், முதல் வெற்றியில் உங்களுடைய பங்களிப்பும் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நீங்கள் முன்வருகிறீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

    அதனால்தான் இந்த முன்பதிவு ஒரு வணிகப் பரிவர்த்தனை அல்ல;
    எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான ஒரு இலக்கிய ஒப்பந்தம்.

    Exclusive • Limited Edition • Hard Bound • Author-Signed Collector’s Copy

    The Most Daring Contemporary Novel in the World

    முதல் பதிப்பின் வரலாற்றில் உங்கள் பெயரையும் பதியுங்கள்.
    இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

    மகா புருஷனை வரவேற்க தயாராகுங்கள்!

    அ) ஆர்டர் செய்பவர்கள், இமெயில் மற்றும் வாட்ஸ்அப் எண்களை மறக்காமல் குறிப்பிடுங்கள்.  அதில், கொரியர் அனுப்பும் முன்பு உங்கள் முகவரி விவரங்களை அப்டேட் செய்ய நினைவுறுத்துவோம்.

    ஆ) ஆர்டர் கன்பார்ம் செய்யும் இமெயில், ஸ்பேம் பகுதியில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.

    இ) தகவல்கள் மற்றும் உதவிக்கு 6379487749 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்

  • Hot
    Purushan- Araathu, புருஷன் - அராத்து
    (0 reviews)

    Purushan- Araathu,...

    600.00

    இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
    எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.

    நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

    – சாரு நிவேதிதா

  • Hot
    இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், Indhiya Thathuva Iyalil Nilaithiruppanavum Azhinthanavaum by Karichchan Kunju (Tamil)
    (0 reviews)

    இந்தியத் தத்துவ...

    400.00

    “தேசிய அளவிலான ஒரு விழிப்புணர்விற்கும், உலகளவிலான முற்போக்கு சக்திகளின் போராட்டங்கள்
    மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தன் மக்களின் போராட்டங்களுக்கும் மத்தியில்
    வாழ்ந்து, இந்தியத் தத்துவப் போக்குகள் குறித்த தனது விலைமதிப்பற்ற பங்களிப்புகளைத் தந்து சென்றவர்தான் தேவி பிரசாத் சட்டர்ஜி”.
    – வால்டர் ரூபன்

    “இந்தியாவில் தேவி பிரஸாத் சட்டோபாத்யாயாவைப் படிக்காத எவரும் தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள முடியாது”.
    – சாரு நிவேதிதா

  • (0 reviews)

    பாலகுமாரன் நினைவுத்...

    350.00

    பாலகுமாரன் என் பேனா, அதன் மூலம் நான் எழுதுகிறேன் என யோகி சொன்னது போல், பாலகுமாரனின் ஒரு தங்கப்பேனா கிருஷ்ணா என்பதையும் அந்தப் பேனா மூலம் தனது Transformation கணங்களை எழுதி நமக்கு அளித்து இருக்கிறார் என்பதையும் இதைப் படிக்கையில் உணர்கிறோம்.

    – பிச்சைக்காரன்

  • Hot
    புருஷன் - அராத்து (கெட்டி அட்டையில்) Purushan Novel by Araathu, Tamil, Hard Cover
    (0 reviews)

    புருஷன் –...

    1,000.00

    புருஷன்

    A Raw and masculine perverted novel.

    இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
    எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.

    நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

    – சாரு நிவேதிதா

  • (0 reviews)

    சாரு நிவேதிதாவால்...

    50.00

    ஒட்டுமொத்த இந்திய சமூக மனநிலைக்கு எதிராக வாழ்ந்தும் எழுதியும் வரும்
    சாரு நிவேதிதாவிற்கு இந்த சமூகத்தில் இருந்து நிராகரிப்பையும் தடையையையும்
    தவிர வேறென்ன கிடைக்கும்? இந்நூல் முழுவதும் பொது சமூகமும், அறிவுலகும் எப்படி
    ஒரு கலைஞனை தீண்டாமைக்குள்ளாக்குகிறது என்பதை விளக்குகிறது.

  • Hot
    புஸ்ஸி – Fool vs Intellectual - Pussy Novella by Araathu (Tamil)
    (0 reviews)

    புஸ்ஸி –...

    200.00

    சாரு நிவேதிதா சொல்வது போல எதார்த்தவாத கதைகளின்‌ காலம் முடிந்துவிட்டதென்று சொல்கிற‌ எழுத்தாளர்களில் அராத்துவும் ஒருவர். தனது எழுத்தில்‌ உருவாகும் எல்லா கதைகளிலும் ஒரு புது பாணியை கையாள்கிறார். இந்த தொகுதியில் வரும் இரண்டு கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. கதை மட்டுமன்றி நூல் வடிவமைப்பும் அவ்வாறே இருக்கிறது. நூலின் முன் அட்டை பின் அட்டை என்கிற விஷயமே கிடையாது. ஒரு அட்டையில் புஸ்ஸி இன்னொரு அட்டையில் Fool vs Intellectual. ஒரு அட்டை பக்கத்தில் ஒரு கதை ஆரம்பிக்க இன்னொரு அட்டை பக்கத்தில் இன்னொரு கதை ஆரம்பிக்கிறது.

  • Limited
    நிறமேறும் வண்ணங்கள் - Niramerum Vannangal by Araathu (Tamil)
    (0 reviews)

    நிறமேறும் வண்ணங்கள்...

    200.00

    அதிர்ச்சி மதிப்புகளுக்காக எழுதுகிற போக்கு இன்றையச் சில எழுத்தாளர்கள்
    நடுேவ வந்திருக்கிறது. அப்போக்கு அராத்து கதைகளில் அறேவ இல்லை.
    நகைச்சுவைக்காக வீம்புக்கு முயல்கிறாராஎன்றால் அப்படியும் இல்லை. நடைமுறை
    வாழ்க்கையில் அவர் கவனித்தவை, சிறுகைதகளில், இருண்ட நகைச்சுவைத்
    தருணங்களாக வெளிப்படுகின்றன. எனக்குப் பிடித்தது, அராத்துவின் அலுப்புத்தராத எழுத்துநடை.
    -கவிஞர் ராஜ சுந்தரராஜன்

  • Hot
    உண்மையான காதல் - Unmaiyana Kadhal by Araathu (Tamil)
    (0 reviews)

    உண்மையான காதல்...

    100.00

    “உண்மையான காதல்” என்பது ரேமண்ட் கார்வரின் பிரபலமான குறுநாவலான What We Talk About When We Talk About Love என்றக் கதையின் மூலம் உருவான புதிய  நாவல். இது காதல் என்ற பரிமாணத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோமோ, அதன் உண்மையான தன்மை எதுவாக இருக்கக்கூடும் என்பதை பற்றிய ஆழமான ஆய்வு. இந்தப் புத்தகத்தில், கார்வரின் கதையின் மூலக்கதையை எடுத்து, நவீன உலகில் நடந்துகொள்ளும் உறவுகள், அந்த உறவுகளின் மாறுதல்கள் மற்றும் அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை பற்றி பேசப்படுகிறது.

    இன்றைய காதல் மற்றும் உறவுகளுக்குள் காமம், திருமணம், லிவ் இன், சைக்கோத்தனம், அழிவது, மீண்டும் உருவாகுவது, மனநிலை மாற்றம் என அனைத்து இடங்களிலும் உறவுகளின் உள்ளார்ந்த மாற்றங்களை காட்டி, எழுதப்பட்ட இந்த குறுநாவல் நம் சமூகத்தில் காதலின் வழியிலும், அதன் உண்மையைப் பற்றிய நம்பிக்கைகளையும் குழப்பங்களை கொண்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் திகிலாகவும், சிந்திக்க வைக்கும்படி இருக்கும்.

    இதன் உள்ளடக்கம், காதல் மற்றும் அதன் உண்மையிலான அர்த்தங்களை கொஞ்சம் கசப்பான முறையில் பரிசீலிக்கிறது. உள் உணர்வுகளும் வெளிப்புற அனுபவங்களும் சிக்கலான முறையில் ஒன்றோடொன்று இழைந்துகொண்டு, ரஜினி மற்றும் சுசீலாவின் உள்ளார்ந்த மனநிலைகள் எவ்வாறு அந்த உறவின் தன்மையை மாற்றுகின்றன என்பதையும், அவர்கள் பெற்றுள்ள மனச்சிக்கல்களையும் எளிய மற்றும் புரிதல் வகையிலும் படைக்கும் வகையில் தொகுத்துக் காட்டுகிறது.

    “எனக்கு என் மீதும், சுசீலா மீதுமே சந்தேகம் வந்து விட்டது,” என்ற கதாநாயகனின் எண்ணங்கள் இந்த புத்தகத்தின் உண்மையான மையத்தை உணர்த்துகின்றன. இது ஒரு அத்தியாயமான கருத்தாடல் மட்டுமின்றி, காதல் மற்றும் அதன் விளைவுகளுக்கு நாம் அளிக்கும் பொருள் அடிப்படையில் எவ்வாறு நம்மை பாதிப்பதாகும் என்பதை நிறைவேற்றுகிறது.

    இந்த குறுநாவலின் முக்கிய குறிக்கோள், காதல் என்பது ஓர் மிகப் பெரிய புரிதலை, நம்பிக்கையையும், பலவகையான உணர்வுகளையும் கொண்டிருக்கும் ஒரு சிக்கலான உண்மை என்று நம்மை நம்ப வைக்கின்றது. உங்களை இந்த சிக்கலான, புரியாத காதலின் பாதையில் ஒரு பயணத்திற்கு அழைக்கிறது!

  • 10% OffHot
    வேணுவனம் - Venuvanam by Devadevan (Tamil)
    (0 reviews)

    வேணுவனம் –...

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

    தான் என்றும் ஒசத்தி என்றும் சறுக்கி விழுந்து விட்ட” மானுடரின் மத அமைப்புடன்
    தன்னைப் பொருத்தவும் அவரது மனம் இடம்கொடுக்கவில்லை; இன்னொரு பக்கம் துல்லிய
    எடைத்தராசாக மாறி இப்பிரபஞ்சத்தை அளவிடும் மார்க்ஸியம் போன்ற பொருளியல்,
    இவ்வுலக தத்துவத்தையும் அவரால் ஏற்க முடியவில்லை. அதற்காகவே அவர் கற்பனாவாத
    மரபுக்குப் போகிறார் என நினைக்கிறேன். அவரது கவிதைகளின் பிரதான உருவகங்களான
    பறவை, வானம் ஆகியவற்றை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில கற்பனாவாத
    கவிதைகளில் (ஷெல்லி, கீட்ஸ்) அடையாளம் காணலாம். குறிப்பாக ஷெல்லியின்
    கவிதைகளுக்கும் தேவதேவனுக்கும் விரல் தொடும் தொலைவு உள்ளது. அதே போலத்தான்
    எமர்சனின் கட்டுரைகள். தேவதேவன் இந்த மேற்கு-கிழக்கு இணைப்பின் வழியே பக்திக்
    கவிதை மரபின் மதசார்பில் இருந்து, கூட்டில் இருந்து பறந்து தனதான ஆகாயத்தைத்
    தொடுகிறார். இதைப் பற்றி கவிதை விமர்சனத்தில் நாம் போதுமானபடிக்கு பேசவில்லை
    என நினைக்கிறேன்.
    -ஆர். அபிலாஷ்

  • Limited
    Sonnaal Nambamaatteergal
    (0 reviews)

    சொன்னால் நம்பமாட்டீர்கள்,...

    350.00

    பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார்.

    தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பிரசுரம் மூலம் நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில் – லாபம் கருதாமல் வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி

    – சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி

  • 10% Off
    விண்மாடம் - Vinmaadam by Devadevan
    (0 reviews)

    விண்மாடம் –...

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

    கவிதையின் மூலம் வாசகனை ஆன்மிக எழுச்சிக்கு முன் நகர்த்தும் பணியை அரூபமாய் செய்கிறார்

    தேடல் உள்ள வாசகன் தேவதேவன் வரிகளின் மூலம் மிக சுலபமாக அப் பேருண்மையை பேரமைதியை கண்டடைவான். என்பதே நான் கண்ட வாசிப்பின் தரிசனம்.
    -அமிர்தம் சூர்யா

     

    Why This Book Costs More — And Why It Matters

    This book is not priced by counting pages.
    It is priced by counting respect.

    The amount you pay goes directly toward honoring the poet Devadevan—not the thickness of paper, but the depth of his voice. Every copy ensures that the poet receives a fair and dignified royalty, far beyond the usual industry norms.

    We have chosen a different path.
    After covering only the essential production costs, the entire remaining value returns to the poet. There is no profit margin hidden here—only gratitude made transparent.

    Yes, the book may be thin in pages.
    But the help it offers, the thought it provokes, and the silence it leaves behind are profoundly thick.

    When you buy this book, you are not just purchasing poetry.
    You are standing with a poet, supporting a lifetime of language, and choosing to value art the way it deserves to be valued.

    This is not a discounted book.
    It is a deliberate one.

    If you believe poets should live with dignity—
    this book is already priced correctly.

  • 17% Off
    ABITHA
    (0 reviews)

    அபிதா –...

    Original price was: ₹120.00.Current price is: ₹100.00.
  • 10% OffHotLimited
    காண்பதும் காணாததும் - KANBADHUM KAANAATHATHUM BY DEVADEVAN
    (0 reviews)

    காண்பதும் காணாததும்...

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

    புல் மரம் வீடு என பராக்கு பார்க்கும் மனிதர் அல்ல.  இயற்கையின் விசித்திரங்களுக்குள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் சரிவை கவிதை ஆக்குவது அவரது வழமையாகும். தேவதேவன் ஒரு தமிழ்க் கவிஞர் என்ற வகையில் , தன் முதுகில் பண்பாட்டின் பாரத்தைச் சுமந்தபடி , கவிதை அனுபவம் எனும் மலையின் சிகரம் நோக்கி களைப்படையாமல் ஏறிக் கொண்டிருக்கிறார். நாம் பூமியில் நின்றபடி அவர் ஏறிய உயரங்களை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

     

    Why This Book Costs More — And Why It Matters

    This book is not priced by counting pages.
    It is priced by counting respect.

    The amount you pay goes directly toward honoring the poet Devadevan—not the thickness of paper, but the depth of his voice. Every copy ensures that the poet receives a fair and dignified royalty, far beyond the usual industry norms.

    We have chosen a different path.
    After covering only the essential production costs, the entire remaining value returns to the poet. There is no profit margin hidden here—only gratitude made transparent.

    Yes, the book may be thin in pages.
    But the help it offers, the thought it provokes, and the silence it leaves behind are profoundly thick.

    When you buy this book, you are not just purchasing poetry.
    You are standing with a poet, supporting a lifetime of language, and choosing to value art the way it deserves to be valued.

    This is not a discounted book.
    It is a deliberate one.

    If you believe poets should live with dignity—
    this book is already priced correctly.

  • 15% OffLimited
    புலியூர்க் கேசிகன்
    Kalamegapulavar Thanipadalgal – காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்
    (0 reviews)

    காளமேகப் புலவர்...

    Original price was: ₹200.00.Current price is: ₹170.00.

    காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சிலேடை பாடல்களைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.

    ~~~~~~~

    திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.

     

     

  • 17% Off
    கம்பன் சுயசரிதம்-Kamban-Suyasaritham
    (0 reviews)

    கம்பன் சுயசரிதம்...

    Original price was: ₹180.00.Current price is: ₹150.00.

    கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான். ஆனால் அந்தக் கதையை அங்கங்கே, செதுக்கிச் சீராக்கி, தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, கம்பன் கொண்டு செல்கின்ற திறம், கம்பன் கவி நலம், கம்பன் பாத்திரப் படைப்புகள் இவையெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அவன் பாடிச் சென்றுள்ள பன்னீராயிரம் பாடல்களையும் நாம் படித்து அனுபவிக்க அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம் என்றே பி.ஜி. ஆச்சார்யா, முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டிகேசி போன்றவர்கள், அந்தக் கம்பராமாயணத்திலிருந்து தெள்ளி எடுத்து, அவற்றைக் கம்ப சித்திரமாகவும், கம்பராமாயண சாரமாகவும், கம்பர் தரும் காட்சியாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

  • 10% OffHot
    மெது விஷமும் பற்ற இயலா புதுமனிதன் - Methu Vishamum Patra Iyala Puthumanithan by Devadevan (Tamil)
    (0 reviews)

    மெது விஷமும்...

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

    “புதியனவற்றைப் புதிய மொழியில் பேச வேண்டியது கவிஞனுக்கு அவசியம்.”
    -மாயாகோவ்ஸ்கி

    இயற்கையோடு இயைந்த நிலையில் தன்னை இயற்கையாக அவதானித்து, இயற்கைப்
    பெருவெளியில் ஆனந்தம் தேடுகிற மனதுடன் தேவதேவன் தத்தளிக்கின்றார். அவருடைய
    மொழியானது கவிதையைத் தவமாகக் கருதி, வெளியில் தன்னிருப்பைக் கண்டறிய முயலுகின்றது.
    -ந.முருகேசபாண்டியன்

  • 10% OffLimited
    நடைமண்டலம் - Nadaimandalam (Poems) by Devadevan
    (0 reviews)

    நடைமண்டலம் –...

    Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

    பாரதியிடம் இருந்த ஆர்ப்பரிக்கும் ,உரத்த குரலில் இருந்து ஒரு கனிந்த சொல்லமைதி மிக்க இடத்திற்கு நவீன கவிதையை எழுதிப் பார்த்தவர் தேவதேவன் எனத் தோன்றுகிறது.  அதே சமயம் காணும் இடத்தில் எல்லாம் உன் காட்சி தோன்றுதடா நந்தலாலா என்ற பார்வைக்கு நெருக்கமாக தன்னையும் தன் சுயத்தையும் இயற்கையின் ஓர் அங்கமாக பார்ப்பது தேவதேவனின் கவிதைகளின் பிரதான குணாம்சமாக இருக்கிறது. கோட்பாடுகளுக்கும் வடிவ மரபுகளுக்கும் வெளியே படைப்பு உந்தத்தால் மட்டும் தொடர்ந்து எழுதும் தேவதேவனின் படைப்பூக்கம் எந்த செயற்கை நுண்ணறிவாலும் ஈடு செய்ய இயலாதது. மானுடம் மீதான அக்கறை இவரது கவிதைகளின் ஆதார ஒளியாய் இருக்கிறது.நடைமண்டலம் என்ற இந்த தொகுப்பு எங்கும் அதற்கான சாட்சியங்களை காணலாம். தமிழ் கவிதையின் மாபெரும் பரிணாமத்தில் தேவதேவனின் பங்கு பிரத்தியேகமானது.

     

    Why This Book Costs More — And Why It Matters

    This book is not priced by counting pages.
    It is priced by counting respect.

    The amount you pay goes directly toward honoring the poet Devadevan—not the thickness of paper, but the depth of his voice. Every copy ensures that the poet receives a fair and dignified royalty, far beyond the usual industry norms.

    We have chosen a different path. After covering only the essential production costs, the entire remaining value returns to the poet. There is no profit margin hidden here—only gratitude made transparent.

    Yes, the book may be thin in pages. But the help it offers, the thought it provokes, and the silence it leaves behind are profoundly thick.

    When you buy this book, you are not just purchasing poetry.  You are standing with a poet, supporting a lifetime of language, and choosing to value art the way it deserves to be valued.

    If you believe poets should live with dignity—
    this book is already priced correctly.